சேலம், மார்ச் 14
சேலம் மாவட்டம், பெத்தனாயக்கம்பாளையம் வட்டம், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் மாணவர்கள் ஏத்தாப்பூரில் தங்கி ஊரக வேளாண்மை பணி அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர். அப்போது ரங்கமநாயக்கன் பாளையத்தில் விவசாயிகளை சந்தித்து பூஞ்சாண உயிர்க் கொல்லி டிரைக்கோடெர்மா விரிடியை பயன்படுத்தும் முறையே பயிற்சி செய்து காட்டினர். டி.விரிடி பயன்படுத்துவதன் லம் நிலக்கடலையில் வரும் வாடல் நோய், தண்டலுகல் மற்றும் வேரழுகல் நோய்களை கட்டுப்படுத்தலாம் என விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். அதாவது அவர்கள் கூறியதாவது ஒரு ஏக்கருக்கு 1 கிலோ டி.விரிடியை 50 -70 கிலோ தொழு உரத்துடன் கலந்து தெளிக்க வேண்டும் அல்லது 1 கிலோ விதைக்கு 4 கிராம் டி.விரிடியை கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து விதைக்க வேண்டும் என விவசாயிகளுக்கு விளக்கினார்கள்.
Spread the love