October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

டிரைக்கோடெர்மா விரிடி பயன்படுத்தி நிலக்கடலையில் அதிக லாபம் பெறலாம்

கோவை, அக்.12

இயற்கை விவசாயம் என்பது தொடங்கும் காலங்களில் சவால் மிகுந்ததாக இருக்கிறது. இருப்பினும் மண்ணைப் பொலபொலப்பானதாக மாற்றிவிட்டால், ரசாயன விவசாயத்திற்கு இணையான மகசூலைப் பெறுவது சாத்தியமே. இந்த சவாலை எதிர்கொண்டு, சரிநிகர் மகசூலைப் பெற டிரைக்கோடெர்மா விரிடி உதவுகிறது. டிரைக்கோடெர்மா விரிடி எதிர் உயிர் பூஞ்சாணம் எனப்படும். இது வேர்களில் வளர்ந்து மற்ற தீங்கு செய்யும் பூஞ்சாணங்களை வளராமல் தடுத்து விடும். அனைத்துப் பயிர்களில் உண்டாகும், நாற்று அழுகல், வாடல் நோய் குறிப்பாக நிலக்கடலையில் அதிகம் தாக்கும் தண்டழுகல் நோய், வேர்அழுகல் நோய்களை கட்டுப்படுத்துகிறது. விதைகளை விதைப்பதற்க்கு முன்பு விதை நேர்த்தி செய்ய ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் ஆரிய அரிசி கஞ்சி கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும். இவை பயிர்களுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்வதுடன், வேரின் வளர்ச்சி மற்றும் செயல்திறன் துரிதப்படுத்தி, மகசூலை அதிகரிக்கிரது. ஒரு எக்டர்க்கு தேவையான 2.5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 12.5 டன் உடன் நன்கு மக்கிய தொழு உரமுடன் கலந்து கடைசி உழவில் இடவேண்டும். டிரைக்கோடெர்மா விரிடி நிலக்கடலை பயிருக்கு தேசிய உணவு பாதுக்காப்பு இயக்த்தில் மானிய விலையில் அனைத்து வட்டாரங்களில் கிடைக்கின்றது. ஒரு எக்டருக்கு 400 கிலோ வீதம் 40-45வது நாளில் இறவை பயிருக்கும் 40-75வது நாளில் மானாவாரிப் பயிருக்கும் செடிகளின் ஓரமாக மண்ணின் ஈரத்தன்மையைப் பொறுத்து இடவேண்டும். மண்ணைக் கொத்தி ஜிப்சம் இட்டு மண் அணைக்கவேண்டும். கால்சியம் மற்றும் கந்தகக் குறைபாடுள்ள நிலங்களில் ஜிப்சம் இடுதல் நல்ல பலனைத் தரும் என கோயம்புத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இரா.சித்ராதேவி, தொழில் நுட்ப உதவியாளர் சூர்யபிரகாஷ் ஆகியோர் தெரிவித்தனர்.

Spread the love