June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

டிரோன்கள் பயன்படுத்த 20 நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி

புது தில்லி, மே 5

டிரோன்கள் பயன்படுத்த 20 நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: ஸ்பைஸ் ஜெட், டன்சோ ஏர் கன்சோர்ட்டியம், ஸ்கைலார்க் உள்ளிட்ட 20 நிறுவனங்கள் சோதனை முறையில் ஆளில்லா விமானங்களை (டிரோன்) பயன்படுத்த விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

விர்ஜினியா டெக் இந்தியா, ஷாப்-எக்ஸ் ஆம்னிபிரசென்ட் கன்சோர்டியம், ஆஸ்டீரியா ஏரோஸ்பேஸ், சென்டில்லியன் நெட்வொர்க்ஸ், மாருத் ட்ரோன்டெக், சாகர் டிஃபன்ஸ் நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கான விதிகள், 2021ல் இருந்து 20 நிறுவனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த அனுமதி ஓராண்டுவரை அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அமலில் இருக்கும் என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கு அனுமதி கோரி 34 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. அவற்றில் 20 நிறுவனங்களை விமான போக்குவரத்து அமைச்சகம் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love