புதுக்கோட்டை, ஜூன் 17
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் வட்டாரத்தில் புலியூர் ஊராட்சியில் நல்லத்தங்கான்பட்டி கிராமத்தில் டிரோன் மூலம் இலைவழி உரம் தெளித்தல் தொடர்பான செயல்விளக்கம் வேளாண் அறிவியல் நிலையம், புதுக்கோட்டை மூலம் செய்து காட்டப்பட்டது. கீரனூர் உழவில் உற்பத்தியாளர் சங்கத்தின் இயக்குநர் அதியமான் மற்றும் கண்ணன் ஊநுழு ஆகியோர்களால் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். வி.மூ. இந்துமதி, வேளாண்மையில் டிரோன் பயன்பாடு குறித்து விளக்கினார். உதவிப் பேராசிரியர் முனைவர் த.ரமேஷ், டிரோன் மூலம் இலைவழி உரம் தெளிப்பதால் ஏற்படும் நன்மைகள், நானோ யூரியா தொழில்நுட்பம், பயறுவகை பயிர்களில் பயறு அதிசயம் தெளித்தல் மற்றும் பஞ்சகாவ்யா குறித்து விளக்கினார். தொழில்நுட்ப வல்லுனர் டீ.பாலமுரளி மற்றும் யு.தினகரன் வேளாண்மையில் வானிலை முன்னறிவிப்பு குறித்த விழிப்புணர்வு பற்றிக் கூறினார்.