July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

டிவிஎஸ் நிறுவனம் 4வது காலாண்டில் ரூ.319 கோடி நிகரலாபம் ஈட்டியது

புது தில்லி, ஏப்.29

முன்னணி இருசக்கர, மூன்று சக்கர, வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த நிதியாண்டின் 4வது காலாண்டில் நான்கு மடங்காக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மும்பை பங்குச் சந்தையிடம் டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் நிறுவனம் ரூ.319.19 கோடியை நிகர லாபமாக ஈட்டிள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே மாதங்களில் நிறுவனத்தின் நிகரவருவாய் ரூ.81.84 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டு நிகரலாபம் 390 சதம் அதிகமாகும்.

மேலும், இந்த காலகட்டத்தில் நிறுவனத்தின் வருவாய் ரூ.6,313.90 கோடியாக வளர்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முந்தைய நிதியாண்டின் இதே மாதங்களில் இது ரூ.4,104 கோடியாக இருந்தது.

இந்தியச் சந்தையிலும், வெளிநாட்டுச் சந்தைகளிலும் நிறுவனத்தின் வாகனங்களின் விற்பனை சிறப்பாக அமைந்திருந்தது. இதன் காரணமாகவே டிவிஎஸ் காலாண்டு நிகரலாபம் சுமார் நான்கு மடங்கு வளர்ச்சியைக் கண்டுள்ளது.

குறிப்பிட்ட மாதங்களில் நிறுவனம் 9.28 லட்ச இருசக்கர மற்றும் 3 சக்கர வாகனங்களை விற்பனை செய்தது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் விற்பனையான 9.28 லட்ச வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 47 சதம் அதிகமாகும் என்று டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love