July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 & வி4எஸ் 2021 மாடல் பைக்குகள் அறிமுகம்

புதிய 2021 மாடல் ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 மற்றும் வி4எஸ் மாடல் பைக்குகளை இந்தியாவில் டுகாட்டி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இவை இரண்டும் நேக்கட் ரக மோட்டார் சைக்கிள்களாகும். சந்தையில் வி4 மாடலின் ஆரம்ப விலை ரூ.19.99 லட்சம் ஆகவும், வி4எஸ் மாடலின் ஆரம்ப விலை ரூ.22.99 லட்சம் ஆகவும் நிர்ணயிக்கப்ப்பட்டுள்ளது.

புதிய மாடல்களின் பவர் யூனிட், எலெக்ட்ரானிக் அம்சங்களில் அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2021 வி4 மாடல் சிவப்பு நிறத்தில் மட்டுமே கிடைக்கும். அதேவேளையில் வி4எஸ் மாடலானது சிவப்பு மற்றும் டார்க் ஸ்டீல்த் என்ற இரு நிறங்களில் விற்பனை செய்யப்படும்.

கொரோனா தொற்று சூழல் முடிவுக்கு வந்த பின்பே டெலிவரி பணிகள் துவங்கும் எனத் தெரிகிறது.

இந்த இரண்டு பைக்குகளிலும் ஒரே மாதிரியான அப்டேட் செய்யப்பட்ட 1,103சிசி டெஸ்மோசெடிசி ஸ்ட்ராடேல் 90-கோண வி4 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த என்ஜின் அதிகபட்சமாக 206 பிஎச்பி பவர் மற்றும் 123 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இந்த என்ஜின் ஆனது எவொ2 பை-டைரக்‌ஷ்னல் மற்றும் ஸ்லிப்-உதவி பெற்ற க்ளட்ச் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த என்ஜின் ஆற்றலை அக்ராபோவிக்கின் ஃபுல்-ரேசிங் எக்ஸாஸ்ட் குழாய் பொருத்துவதின் மூலமாக 217 பிஎச்பி மற்றும் 130 என்எம் டார்க் திறனாக அதிகரிக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த எக்ஸாஸ்ட் அமைப்பினால் பைக்கின் எடை 3 கிலோ வரை குறையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

டுகாட்டி வி4 மாடலின் எடை 201 கிலோ மற்றும் வி4எஸ் பைக்கின் எடை 199 கிலோ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 கி.மீ. வேகத்தை 3 வினாடிக்கும் குறைவான நேரத்தில் எட்டிவிட முடியும் என்றும், இந்தப் பைக்குகளில் அதிகபட்ச வேகம் மணிக்கு 270 கி.மீ. ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாடல்களில் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலிற்கு 5-இன்ச் டிஎஃப்டி வண்ண திரை தரப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் பைக்குகளில் கார்னரிங் ஏபிஎஸ் எவொ, டுகாட்டி ட்ராக்‌ஷ்ன் கண்ட்ரோல் எவொ2, டுகாட்டி வீலிங் கண்ட்ரோல் எவொ, டுகாட்டி ஸ்லைட் கண்ட்ரோல், என்ஜின் ப்ரேக் கண்ட்ரோல் எவொ மற்றும் ஆட்டோமேடிக் டயர் கரெக்சன் அம்சங்கள் உள்ளன.

அத்துடன் பல்வேறு ரைடிங் மோட்கள் மற்றும் பவர் மோட்களும் இடம்பெற்றுள்ளன.

முன்பக்கத்தில் 43மிமீ-இல் முழுவதுமாக அட்ஜெஸ்டபிள் யுஎஸ்டி ஷோவா பிஸ்டன் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் சாக்ஸ் மோனோ-ஷாக்கும் உள்ளன.

அதேநேரம் வி4எஸ் பைக்கில் அட்ஜெஸ்டபிள் ஹோலின்ஸ் நிக்ஸ்30 யுஎஸ்டி ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் ஹோலின்ஸ் டிடிஎக்ஸ்36 மோனோ-ஷாக் யூனிட்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இரண்டு பைக்குகளிலும் ப்ரெம்போ மோனோப்ளாக் ஸ்டைலிமா எம்4.30 4-பிஸ்டன் காலிபர்களுடன் 330மிமீ-ல் இரட்டை டிஸ்க்குகள் முன் சக்கரத்திலும், 2-பிஸ்டன் காலிபருடன் 245மிமீ-ல் ஒற்றை டிஸ்க் பின்சக்கரத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் வி4 மாடலில் 17 இன்ச் 5-ஸ்போக் அலாய் சக்கரங்களும், வி4எஸ் பைக்கில் 3-ஸ்போக் அலுமினியம் அலாய் சக்கரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

Spread the love