May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

டெக்னோ கேமன் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் நைஜீரியாவில் அறிமுகமானது

புதிய டெக்னோ கேமன் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை நைஜீரியாவில் அறிமுகம் செய்துள்ளது டெக்னோ நிறுவனம். விரைவில் இந்தியா உள்ளிட்ட இதர சந்தைகளில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்னோ கேமன் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.8-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் 1080 × 2460 பிக்சல் துல்லியம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் அம்சங்களைப் பெற்றுள்ளது.

மீடியா டெக் ஹீலியோ ஜி 95 சிப்செட் புராஸசருடன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் செயல்படும்.

டெக்னோ கேமன் 17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி உள்ளது. அத்துடன் மெமரிகார்டு ஸ்லாட் உள்ளது.

இந்த மொபைலின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் கேமரா லென்ஸ் என நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது.

மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் விலை இந்திய மதிப்பில் ரூ.22,600-ஆக உள்ளது.

Spread the love