January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தஞ்சாவூர், மே 10

தென் தமிழக மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது, தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (மே 11) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

12 மற்றும் 13ம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Spread the love