October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

டைட்டன் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2 லட்சம் கோடியை தாண்டியது

புது தில்லி, அக்.8

டாடா குழுமத்தைச் சேர்ந்த டைட்டன் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூலை – செப்டம்பர் காலாண்டில் தேவைகள் மிக வலுவாக அதிகரித்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்ததை அடுத்து, இந்நிறுவன பங்குகள் விலை அண்மையில் 11 சதத்துக்கும் கூடுதலாக அதிகரித்தது.

இந்நிலையில், இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2.11 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

டாடா குழுமத்தை பொறுத்தவரை, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் தான் முதன் முதலாக ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டியது. தற்போது இந்நிறுவனத்தின் மதிப்பு ரூ.14.20 லட்சம் கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. டைட்டன் நிறுவனத்தின் விற்பனை கிட்டத்தட்ட கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு திரும்பியுள்ளதாகவும், நாட்டில் உள்ள அனைத்து ஸ்டோர்களின் செயல்படும் நாட்கள் எண்ணிக்கை 90 சதத்துக்கும் அதிகமாகி இருப்பதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், மதிப்பீட்டு காலாண்டில், ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்யும் வசதியையும் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

அடுத்து, பண்டிகை காலத்தை ஒட்டி விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love