டைம்ஸ் குழுமத்தின் தலைவர் இந்து ஜெயின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி :
டைம்ஸ் குழுமத்தின் தலைவர் இந்து ஜெயின் அம்மையார் அவர்கள் கொரோனா தொற்றுப் பாதிப்பால் மரணமடைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ஆன்மீக நாட்டமும், கலைகளின் புரவலருமாக விளங்கிய இந்து ஜெயின் அவர்கள், தமது சேவைகளுக்காக பத்ம பூஷண் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்றவர் ஆவார். அவரது மறைவு பத்திரிகை உலகிற்கு மட்டுமின்றி, சமூகசேவையில் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், டைம்ஸ் குழும நிர்வாகிகள், பணியாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்