June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

டைவா 50 இன்ச் 4K UHD ஸ்மார்ட் டிவி இந்திய சந்தையில் அறிமுகம்

binary comment

மும்பை, ஏப்.24

மிக மெல்லிய பெசல்களை கொண்ட புது ஸ்மார்ட் டிவி மாடலை டைவா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: நுகர்வோர் மின்சாதன பொருட்கள் உற்பத்தியாளரான டைவா இந்திய சந்தையில் 50 இன்ச் D50162FL 4K ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்தது. இது மேட் இன் இந்தியா டிவி மாடல் ஆகும். பெசல்-லெஸ் டிசைன், HDR10, dbx-டிவி ஆடியோ தொழில்நுட்பம் போன்ற அம்சங்கள் இந்த டிவியில் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் 96 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி ரே´யோ கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே 4k ரெசல்யூன், குவாண்டம் லுமினிட் தொழில்நுட்பம் கொண்டது ஆகும். இது ஏ-55 குவாட் கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 9 ஒஎஸ் மற்றும் தி பிக் வால் யுஐ கொண்டிருக்கும் டைவா ஸ்மார்ட் டிவி டிஸ்னி பிளஸ், ஹாட்ஸ்டார், ஜீ5, சோனி லிவ், வூட் போன்ற ஸ்டிரீமிங் சேவைகளை இயக்கும் வசதி கொண்டுள்ளது. இது 20 வாட் ஸ்பீக்கர் சிஸ்டம், 5 சவுண்ட் மோட்களை கொண்டுள்ளது.

டைவா ஸ்மார்ட் டிவி விலை ரூ. 39,990 ஆகும். இது நாடு முழுக்க பெரும்பாலான விற்பனை மையங்களில் கிடைக்கிறது.

Spread the love