January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

டொயோட்டா இன்னோவா ஸ்பெசல் எடிசன் இந்தோனேசியாவில் அறிமுகம்

மும்பை, மே 11

இன்னோவாவின் 50ம் ஆண்டு நிறைவு எடிசனை டொயோட்டா நிறுவனம் இந்தோனி´ய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. டொயோட்டா அஸ்ட்ரா மோட்டார்ஸின் மூலம் இந்த ஸ்பெசல் எடிசன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

50 ஆண்டுகள் என்பதினால் வெறும் 50 யூனிட்கள் மட்டுமே இந்த ஸ்பெ­ல் எடிசன் கார் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனித்துவமான முத்திரை பெற்றுவந்துள்ள இந்த லிமிடெட் எடிசன் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் காஸ்மெட்டிக் அப்டேட்களை பெற்றுள்ளது.

லக்சரி தோற்றத்திற்காக முன்பக்க க்ரில்லை சுற்றிலும் பளபளப்பான கருப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புற கேபின் முழுக்க பழுப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் டேஸ்போர்டில் மர துண்டுகளையும் பார்க்க முடிகிறது. தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம் மற்றும் 3-ஸ்போக் பல-செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவை மட்டுமே கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. மற்றவை அனைத்தும் அப்படியே தான் தொடரப்பட்டுள்ளன.

இந்தோனிசிய நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டொயோட்டா கிஜங் இன்னோவா லிமிடெட் எடிசன் வி லக்சரி வேரியண்ட்டில் 2.0 லிட்டர், டிஒஎச்சி பெட்ரோல் மற்றும் 2.4 லிட்டர் டீசல் என்ற இரு என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த என்ஜின்கள் உடன் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அதுவே இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இன்னோ க்ரிஸ்டாவில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினிற்கு மாற்றாக 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

Spread the love