October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீராங்கணைகளுக்கு அரசு பணிநியமன ஆணை-முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, அக்.11

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2020-ல் கலப்புத் தொடர் ஒட்டத்தில் பங்கேற்றுத் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த வீராங்கணைகள்வெ.சுபா மற்றும் எஸ்.தனலட்சுமி ஆகியோருக்குத்தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் விளையாட்டு அலுவலர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார். ஒலிம்பிக், சர்வதேச மறறும் இந்திய அளவிலான போட்டிகளில்
தமிழ்நாட்டைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கேற்று, பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில், உலகத் தரத்திலான பயிற்சி வழங்குதல், விளையாட்டுக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், உயர் செயலதிறன் மிக்கபயிற்சி அளித்தல், வெற்றி பெறும் வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, விளையாட்டு வீரர், வீராங்கணைகளை உற்சாகப்படுத்தி அவர்களுக்குத் தேவையான அனைத்துஉதவிகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து அளித்து வருகிறது.

அந்த வகையில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த இரு வீராங்கணைகள் செல்வி வெ.சுபா மற்றும் செல்வி எஸ்.தனலட்சுமி ஆகியோர் கடந்த 30.7.2021 ஆம் நாளன்று ஐப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 4,400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்றுப் பெருமை சேர்த்த இவ்விரு வீராங்கனைகளையும் கௌரவப்படுத்தும் வகையில், முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் விளையாட்டு அலுவலர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

Spread the love