நாமக்கல், ஏப்.1
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டாரம், மோர்பாளையம் கிராமத்தில் ட்ரோன் மூலம் விளைநிலங்களில் களைக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது. இயற்கை ட்ரோன் நிறுவனத்தைச் சேர்ந்த மருது மற்றும் சதீஷ் ஆகியோர் வேளாண்மையில் ட்ரோன்களின் பங்களிப்பைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் நாமக்கல் பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். இது போன்ற புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.
Spread the love