ஈரோடு, மார்ச் 11
கடந்த 10,000 ஆண்டுகளாக விவசாயம் நமக்கு வாழ்வாதாரமாக திகழ்கிறது. ஆரம்ப காலகட்டங்களில் பெண்களே விவசாயத்தின் முக்கிய பங்காற்றியுள்ளனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித இனத்தோடு சேர்ந்து விவசாயமும் பல்வேறு முன்னேற்றங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், விவசாயம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை சந்தித்து வரும் நிலையில் ட்ரோன் தொழில்நுட்பம் விவசாயத்தில் புரட்சி ஏற்படுத்தும் திறன் கொண்டது. தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அமலில் உள்ள நிலையில் விவசாயத்தில் வேலையாட்களுக்கு பற்றாக்குறை உருவாகியுள்ளது. இப்பிரச்சனையைத் தீர்க்கும் வழி காட்டியாக ட்ரோன் தொழில்நுட்பம் உதவுகிறது. இத் தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு மத்தியில் பரப்ப கோவை வேளாண் தமிழ்நாடு பல்கலைக் கழக மாணவர்கள் தேவர்தாசன், கீர்த்திவர்மன், பார்த்திபன், செல்வகணேஷ், விக்னேஷ், கௌரி சங்கர், ராஜநிர்மல், தவளகிரி விகாஸ் ரெட்டி, மாதேஷ், கல்லம்பள்ளி யஸ்வந்த் ராஜ், விஜய் ஆகியோர் நம்பியூர் வட்டாரத்தில் வேமாண்டம்பாளையம் கிராமத்தில் ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி தெளிக்கும் செயல்விளக்கம் அளித்தனர். இதைப் பற்றி மாணவர்கள் கூறியதாவது, இத்தொழில்நுட்பம் முதல்கட்ட பரிசோதனையில் உள்ள நிலையில், இதை விவசாயிகளுக்கு மேலும் பரப்ப அரசு விவசாயிகளுக்கு மானியம் மற்றும் பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவிக்கின்றனர்.
Spread the love