சேலம், மே 5
தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.3க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
சேலம் மாவட்டம், தலைவாசல், ஆத்தூர், வாழப்பாடி, வெள்ளிமலை உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில், தக்காளி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. அறுவடை செய்யும் விவசாயிகள், தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்கின்றனர். அங்கு, கடந்த, 1ம் தேதி, தக்காளி கிலோ, ரூ.3க்கு விற்பனையானது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால், மார்க்கெட் செயல்படவில்லை. திங்கள்கிழமை வியாபாரிகள் அதிகளவில் வந்ததால், கிலோ, ரூ.4 முதல் 5 வரை விலை போனது. செவ்வாய்கிழமை அதே அளவான, 12 முதல் 14 டன் உள்ளூர் தக்காளி, ராயக்கோட்டை, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 6 டன் வரத்து இருந்தது. ஆனால், வழக்கமான அளவில் மட்டும் வியாபாரிகள் வந்ததால், ஒரு கிலோ தக்காளி, ரூ.3க்கு விற்பனையானது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.