August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தக்காளி சாகுபடி தொழில்நுட்பங்கள்

சிவகங்கை, ஜூலை 8

தக்காளியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்து வேளாண்மைத்துறை-காளையார்கோவில், வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.என்.செந்தில்நாதன், விரிவான முறையில் எடுத்துக் கூறினார்.

நடவு முறை : சரியான ஈரப்பதத்தில் தோட்டத்தை உழவு செய்ய வேண்டும். 3 அல்லது 4 முறை உழவு செய்து 10 நாள் சிதைவு ஏற்படுவதற்காக விட வேண்டும். பசுந்தாழ் உமைச் சணப்பை விதைத்து 35 நாட்களுக்கு பின் மடக்கி உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் தொழு உரம் அல்லது கம்போஸ்ட் இடலாம். நடவுக்கு முன் தொழு உரத்துடன் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றை கலந்து இட வேண்டும்.

60 செ.மீட்டர் இடைவெளியில் பார்கள் உழவு சால்கள் அமைக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 12 எண்ணிக்கை என்ற அளவில் இணக்கவர்ச்சி பெரோமோன்களை அமைக்க வேண்டும்.
நாற்று நட்ட மூன்றரவது நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பிறகு மண்ணின் ஈரத்தன்மையை பொறுத்து வாரத்திற்கு ஒரு முறை அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.

நுண்ணூட்டம் : தக்காளி நடவு செய்த 30 நாட்களுக்குள் ஒரு ஏக்கருக்கு காய்கறி நுண்ணுரம் 5 கிலோவை 20 கிலோ மணலுடன் கலந்து தூவி விட வேண்டும்.

வளர்ச்சி ஊக்கி : மகசூலை அதிகரிப்பதற்க்காக பிளானோபிக்ஸ் தக்காளி நடவு செய்த 45-65 நாட்களில் ஒரு லிட்டர் (நல்ல தண்ணீராக இருக்க வேண்டும்). தண்ணீருக்கு 0.25 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். இவற்றை தெளிப்பதால் 120 நாட்களில் பூ உதிர்வதையும் தடுக்கும். அல்லது டிரைகான்டிகால் என்ற பயிர் ஊக்கியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி கிராம் என்ற அளவில் கலந்து பயிர் பூக்கும் சமயத்தில் 15 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து மூன்று முறை தெளிக்க வேண்டும்.

பூச்சி தாக்குதல் :
இலை சுருட்டு நச்சுயிரி நோய் தக்காளி செடியை தாக்கும் முதன்மை நோயாகும். இந்த இந்த நச்சுயிரி வெண் ஈக்கள் மூலமாக பரவுகிறது. வெய்யில் பாலங்களில் மிகவும் அதிகமாக இருக்கும் இதனை கட்டுபடுத்த எக்டருக்கு மெத்தில் டெமட்டான் அல்லது மோனோகுரோட்டோபஸ் அல்லது டைமீத்டோயேட் 500 மி.லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
இலைப்பேன் தாக்குதல் தக்காளியில் புள்ளி வாடல் நோயினை பரப்பும் காரணீயாக செயல்படுகிறது. இந்நோயினால் தாக்கப்பட்ட செடிகளை முதலில் களைவதுடன் இலைப்பேன்களை கட்டுப்படுத்த எக்டருக்கு 7 கிலோ ப்யூரடான் குறுனையை இட வேண்டும்.

இலைப்புழு மற்றும் காய்ப்புழு தாக்குதல் :
தக்காளியில் தழைச்சத்து அதிகமாக இடும்பொழுது பச்சைக்காய்வின் காய் அந்துப்பூச்சி இலையின் பின்புறம் முட்டை இட்டுவிடும் குஞ்சுகள் பொரித்து விட்டு இலையின் பின்புறத்தில் உள்ள பச்சையத்தை உறிஞ்சி விடும். இலை கோடு கோடுகளாக இருக்கும்.

அறிகுறி : தக்காளி இலையில் வெண்மை நிற கோடுகள் தெரியும். பச்சையம் இழந்து காணப்படும். இலையை சுரண்டி பார்த்தால் இலை கண்ணாடி போல வெளிறிய நிறத்தில் தெரியும். மகசூல் பாதிக்கும் பிடித்த பூக்கள் கொட்டி விடும். மகசூல் இழப்பு ஏற்படும்.

இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறை :
· கோடை உழவு செய்து கூட்டுப்புழுவின் முட்டை பருவத்தை கட்டுப்படுத்தலாம்.
· ஊடுபயிர் சாமந்திப்பூ சாகுபடி செய்து தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
· ஆமணக்கு பயிரை வரப்பு ரங்களில் வளர்த்து காள்ப்புழுக்களை கவர்ந்து கட்டுப்படுத்தலாம்.
· ஒட்டுண்ணி அட்டை ஒரு ஏக்கருக்கு 5 சி.சி கட்டலாம்.
· இனக்கவர்ச்சி பொறி ஒரு ஏக்கருக்கு 5 இடத்தில் வைத்து ஆண் அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்.
· விளக்குப்பொறி ஓரு ஏக்கருக்கு ஒன்று வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
· புழுவின் தாக்குதல் அதிகமாக தென்பட்டால் பேசிலஸ் துருஞ்சியன்ஸ் பாக்டீரியா ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் கலந்து அடிக்கலாம்.
· என்.பி.வி. கரைசல் ஓரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.
· இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் கரைசல் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி அளவு கலந்து தெளிக்கலாம்.

இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் கரைசல் தயாரிப்பு முறை :
இஞ்சி 250 கிராம் பூண்டு 250 கிராம் பச்சை மிளகாய் 250 கிராம் மூன்றையும் சேர்த்து அரைத்து இரண்டு லிட்டர் மாட்டுக்கோமியம் சேர்த்து இரண்டு நாட்கள் ஊறவைத்து இந்த கரைசலில் 300 மில்லி 10 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து அவற்றுடன் ஒட்டும் திரவம் சேர்த்து 10 நாட்கள் இடைவெளியில் தேவைக்கேற்ப தெளித்து கட்டுப்படுத்தலாம்

இராசயன முறையில் கட்டுப்படுத்தும் முறை : குவினால் பாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி அல்லது குளோரிபைரிபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

குறிப்பு : சாகுபடி செலவை குறைக்கவும், நல்ல தரமான காய்கறியை உற்பத்தி செய்யவும், இயற்கை பூச்சி கொல்லி முறைகளை கடைப்பிடித்து இலைப்புழு மற்றும் காய்ப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.

Spread the love