August 4, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு

கோவை, மே 21

பொள்ளாச்சி மொத்த காய்கறி மார்க்கெட்டில், 15 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி விலை, ரூ.150 முதல் 170 ஆக சரிந்தது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு, சுற்றுப்பகுதியில் விளைவிக்கப்படும், காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. உள்ளூர் மற்றும் கேரள வியாபாரிகளால், ஏல முறையில் காய்கறிகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. வியாழக்கிழமை ஏலத்தில், 15 கிலோ எடை கொண்ட, ஒரு கூடை தக்காளி ரூ.170க்கு விற்பனையானது. மேலும், வெண்டைக்காய் கிலோ ரூ.40, கத்தரிக்காய் வெள்ளை ரகம் ரூ.40, பச்சை ரகம் ரூ.20, பாகற்காய் ரூ.30க்கும் விற்பனையானது. கடந்த வார ஏலத்தில், தக்காளி கூடை ஒன்றுக்கு, ரூ.250 விலை கிடைத்தது. இவ்வார ஏலத்தில் வரத்து அதிகமிருந்ததால், விலை சரிவு ஏற்பட்டது. மற்ற காய்கறிகள் விலை கடந்த வாரத்தின் விலையே நீடித்தது.

Spread the love