September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தக்காளி விலை சரிவு

கோவை, செப்.13

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு, தக்காளி வரத்து அதிகமாக உள்ளதால், விலை சரிவு ஏற்பட்டது.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, தக்காளி பெட்டி ஒன்று, அதிகபட்சமாக, ரூ.150க்கு விற்பனையானது. புடலை கிலோ – 10, பீர்க்கன் – 25, பாகற்காய் – 15, சுரைக்காய் – 16, கொத்தவரை -20, வெண்டை – 15, அவரை – 25, பீட்ரூட் – 12, மல்லித்தழை – 30, முருங்கை – 30, பூசணி மற்றும் அரசாணிக்காய் கிலோ – 6 ரூபாய்க்கும் விற்பனையானது. அனைத்து காய்கறிகளின் விலையும் சீராக இருந்த நிலையில், தக்காளி விலை கடந்த வாரத்தை காட்டிலும், 15 கிலோ எடையுள்ள பெட்டிக்கு, ரூ.30 குறைந்தது.

Spread the love