October 23, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தக்காளி விலை திடீர் உயர்வு

திருநெல்வேலி, அக்.9

தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம், ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிகளவு பயிரிடப்படுகிறது. அவை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவு விளைச்சலால் தக்காளி விலை பெரும்பாலும் கட்டுக்குள்ளேயே இருக்கும்.

சில நேரங்களில் ஒற்றை இலக்கத்தில் கூட விலை இருப்பதால் பறிக்கப்படாமல் செடிகளிலேயே விட்டு விடும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வரும். இந்நிலையில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அணை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் தக்காளி செடிகள் தண்ணீரில் மூழ்கி அழுகி விட்டது. இதனால், மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைய தொடங்கியது.

இதனால், கடந்த வாரம் 1 கிலோ தக்காளி ரூ.15 முதல் 20க்கு விற்பனையான தக்காளி, நேற்று ரூ.40 முதல் 45 வரை விற்பனை செய்யப்பட்டது.

Spread the love