புது தில்லி, மே 20
ஆதார் இல்லை என்று யாருக்கும் தடுப்பூசி மருந்து அல்லது மருந்துவமனை சிகிச்சை மறுக்கப்படமாட்டாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. தடுப்பூசி மற்றும் மருத்துவமனையில் சேர்ப்பது போன்ற சில அத்தியாவசிய சேவைகளுக்கு ஆதார் தேவை என்பதற்காக குடியிருப்பாளர்களுக்கு சேவைகள் மறுக்கப்படுவதாகக் கூறி சில ஊடகங்களில் வெளிவந்த செய்திகளுக்கு எதிராக தற்போதைய கோவிட் -19 சூழ்நிலைகளில் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.
கோவிட் தொற்று சூழ்நிலைகளில். ஒருவருக்கு ஆதார் இல்லை என்பதால் சேவைகள் மறுக்கப்படாது என்று உடாய் கூறியுள்ளது. ஒருவரிடம் ஆதார் இல்லையயன்றால் அல்லது சில காரணங்களால் ஆதார் ஆன்லைன் சரிபார்ப்பு வெற்றி பெறவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது துறை ஆதார் சட்டம், 2016இன் பிரிவு 7 மற்றும் 2017 டிசம்பர் 19-ம் தேதியிட்ட அமைச்சரவை செயலக ஆணை ஆகியவற்றின்படி சேவையை வழங்க வேண்டும்..
எந்தவொரு அத்தியாவசிய சேவையை மறுப்பதற்கான ஒரு காரணமாக ஆதாரை தவறாக பயன்படுத்தப்படக்கூடாது என்று உடாய் கூறியுள்ளது. ஆதார் நிறுவனத்தில் நிறுவப்பட்ட விதிவிலக்கு கையாளுதல் நெறிமுறை உள்ளது. மேலும், ஆதார் இல்லாத நிலையில் சேவைகளை வழங்குவதை உறுதி செய்ய இதனை பின்பற்ற வேண்டும். வேறு காரணங்களுக்காக ஒரு குடியிருப்பாளர் ஆதார் வைத்திருக்கவில்லை என்றால், ஆதார் சட்டத்தின்படி அத்தியாவசிய சேவைகளை மறுக்கக் கூடாது.
இது போன்ற சேவைகள் மறுக்கப்பட்டால். சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகளின் பார்வைக்கு வியத்தை கொண்டுவர வேண்டும் என்று உடாய் அறிவுறுத்துகிறது. இந்தத் தகவல், பெங்களூரு உடாய் மண்டல அலுவலக மேலாளர் ஆனந்த் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.