August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தனியார் மருத்துவமனைகளில் கோவிட் தடுப்பூசி விலை அதிகரிப்பு

புது தில்லி, மே 11

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி விலையை அதிகபட்சமாக விற்பனை செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நாட்டில் கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கோவிசீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. ரஷ்யா தயாரிப்பான ஸ்புட்னிக் தடுப்பூசியும் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. கோவிசீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு கொடுத்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 1-ந் தேதியில் இருந்து 18 முதல் 44 வயதுடையவர்களுக்காக தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி உள்ளன.

தடுப்பூசிகள் தலா ரூ.250-க்கு மத்திய அரசால் பெறப்பட்டு வழங்கப்படுகிறது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி விலை 6 மடங்கு அதிக கட்டணத்தில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தனியார் மருத்துவமனையும் வெவ்வேறு விதமான விலையை தடுப்பூசிக்கு நிர்ணயம் செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொல்கத்தா, ஐதராபாத் மருத்துவமனைகளில் ரூ.850 வரை வசூலிக்கப்படுவதாகவும், மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி கட்டணம் ரூ.700 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவா, பெங்களூரில் ரூ.1350, நொய்டா, ஜெய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ரூ.1250 வசூலிக்கப்படுகிறது. ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ரூ.1200 வரை வசூலிக்கின்றன. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ரூ.1250 வரை வசூல் செய்கிறது. நாட்டிலேயே பெங்களூரில் அதிகபட்சமாக ஒரு தனியார் மருத்துவமனை ஒரு தடவை தடுப்பூசி போட ரூ.1500 வரை கட்டணம் நிர்ணயித்து உள்ளது.

Spread the love