September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி செப்டம்பர் 18ல் பதவியேற்பு

சென்னை, செப்.14

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவி வருகிற செப்.18ம் தேதி பதவியேற்றுக்கொள்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: ஆர்.என். ரவி, 1976-கேரள பிரிவைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி. 2012ல் மத்திய அரசு உளவுப் பிரிவின் சிறப்பு இயக்குநராக பணியாற்றியுள்ளார். அதன்பின்னர் 2019ல் நாகாலாந்து ஆளுநராக பொறுப்பேற்றார். நாகாலாந்து பிரிவினைவாதக் குழுக்களுடன் மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில் அவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

மேலும், நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை தமிழகத்தின் ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அண்மையில் உத்தரவிட்டார்.

இந்நிலையில், செப்டம்பர் 18ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, புதிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தமிழகத்தின் தற்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்தின் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love