தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. மேலும் வருகிற 3ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
பெருங்கல்லூர் (புதுக்கோட்டை) 6, திருச்சி AP (திருச்சி), ஆதனக்கோட்டை (புதுக்கோட்டை), குழித்துறை (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி) தலா 5, நத்தம் (திண்டுக்கல்), ஓட்டன்சத்திரம் (திண்டுக்கல்), திருச்சி நகரம் (திருச்சி) தலா 4, தக்கலை (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி), கோத்தகிரி (நீலகிரி), காரியாப்பட்டி (விருதுநகர்), உதகமண்டலம் (நீலகிரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), பழனி (திண்டுக்கல்), சிற்றாறு (கன்னியாகுமரி), சிவலோகம் கன்னியாகுமரி) தலா 3, குளச்சல் (கன்னியாகுமரி), அருப்புக்கோட்டை (விருதுநகர்), துவாக்குடி (திருச்சி), பெரியகுளம் (தேனி), காட்டுமயிலூர் (கடலூர்) தலா 2, கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), கொடைக்கானல் (திண்டுக்கல்), எமரலாடு (நீலகிரி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), அன்னவாசல் (புதுக்கோட்டை), பொன்மலை (திருச்சி), குந்தா பாலம் (நீலகிரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), திருமங்கலம் (மதுரை), நாகர்கோவில் (கன்னியாகுமரி), புதுக்கோட்டை (புதுக்கோட்டை), ஆனைமடுவு அணை (சேலம்), புத்தன் அணை (கன்னியாகுமரி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) தலா 1 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.