வானிலை மையம் தகவல்
சென்னை, மே 10
மே 12 முதல் 14 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். இடி, மின்னலுடன் மழை விட்டு விட்டு பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மீனவர்கள் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று மற்றும் நாளை வடமேற்கு வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்கக்கடலின் மத்திய மேற்கு, வடமேற்கு, கேரளா, ஆந்திரா, லட்சத்தீவு பகுதிகளில் பலத்த சூறாவளி வீசக்கூடும் எனவும் மணிக்கு 40 முதல் 75 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளத்தால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். வங்கக்கடலில் புயல் தீவிரமடைந்துள்ளதால் ஆழ்கடல் பகுதிக்குச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love