May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தமிழகத்தில் வணிக சிலிண்டர் விலை ரூ.46 சரிவு

சென்னை, மே 3

தமிழகத்தில், எண்ணெய் நிறுவனங்கள் இம்மாதம் வீட்டு சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படாத நிலையில், வணிக சிலிண்டர் விலை, ரூ.46 குறைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும், சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, மாதந்தோறும், சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன.

தமிழகத்தில், ஏப்ரலில் வீட்டு காஸ் சிலிண்டர், ரூ.825 க்கு விற்கப்பட்டது. இம்மாதம், அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. வாடிக்கையாளர்கள், அந்த விலை கொடுத்து சிலிண்டர் வாங்கியதும், அவர்களின் வங்கி கணக்கில், மத்திய அரசு வழங்கும் மானிய தொகை வரவு வைக்கப்படும். அதேநேரம், இம்மாதம், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை, ரூ.46 குறைக்கப்பட்டு, ரூ.1,725.50 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது, ஏப்ரலில், ரூ.1,771.50 க்கு விற்பனையானது.

Spread the love