சென்னை, மே 10
நாட்டில் கோவிட் 2வது அலையை கட்டுப்படுத்துவதற்காக, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு நேரடியாக கோவிட் தடுப்பூசி மருந்தான கோவாக்சினை அனுப்ப உள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகம், ஆந்திரம், அசாம், சத்தீஷ்கர், தில்லி, குஜராத், காஷ்மீர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, தெலங்கானா, உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 14 மாநிலங்கள் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் கோவிட் தடுப்பூசி மருந்தான கோவாக்சினை கேட்டு விண்ணப்பித்திருந்தன.
இந்நிலையில், மத்திய அரசின் ஒதுக்கீடு அடிப்படையில் தடுப்பூசி மருந்தை வழங்கி வரும் நிலையில் தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களின் கோரிக்கைகள் விரைவில் பரிசீலிக்கப்பட்டு மருந்து இருப்பின் அடிப்படையில் 24 மணி நேரமும் மாநிலங்களுக்கு அனுப்ப இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.