August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தமிழகத்துக்கு 6 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சுகாதாரத்துறை தகவல்

சென்னை, ஏப்.20

தமிழகத்துக்கு மேலும் 6 லட்சம் கோவிUல்ட் தடுப்பூசிகள் வரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. தமிழகத்தைப் பொருத்தவரை, 5 ஆயிரம் மையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்ஸின், கோவிஷில்ட் ஆகிய தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு செயல் திட்டத்தின்போது ஏறத்தாழ 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் மாநிலத்தின் பயன்பாட்டுக்காக மேலும் 60 ஆயிரம் குப்பி தடுப்பு மருந்துகள் தமிழகம் வரவுள்ளதாகவும், ஒவ்வொரு குப்பியிலும் 10 டோஸ் வீதம் தடுப்பூசிகள் இருக்கும் என சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவத்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்துக்கு இதுவரை 55.8 லட்சம் டோஸ் கோவாக்ஸின், கோவிஷில்ட் தடுப்பூசியை மத்திய அரசு அனுப்பியுள்ளது. அதில் 48.07 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 8.8 லட்சம் கையிருப்பில் உள்ளன. இந்நிலையில், மேலும் 6 லட்சம் கோவிஷில்ட் மருந்துகள் வரவுள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் தமிழகம் முழுவதும் 76,005 பேருக்கு தடுப்பூசி கடந்த திங்கள்கிழமை செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை 48,07,148-ஆக உயர்ந்துள்ளது.

Spread the love