August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தமிழக வேளாண் விளை பொருட்களை ஏற்றுமதி செய்ய அதிக வாய்ப்பு – ஒரு அலசல்

தமிழகம் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை காட்டிலும், வேளாண் விளைப்பொருட்கள் உற்பத்தியில் என்றும் பின்தங்கியது இல்லை. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டிதலின்பேரில், ஒவ்வொரு மாவட்டமும் ஒரு ஏற்றுமதி மையமாக மாற்றுவதற்கான தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2020-21ஆம் நிதியாண்டை விட இந்த ஆண்டுக்கான ஏற்றுமதி 22 சதவீகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க தகவலாகும்.

வாழை பழ உற்பத்தியில் மகாராஷ்டிரத்திற்கு அடுத்த படியாக உற்பத்தியில் குறிப்பாக, ரொபஸ்டா, செவ்வாழை, நேந்திரன் வாழை பழங்களுக்கு எற்றுமதி வாய்ப்பு உள்ளதாகவும், அபிடா மற்றும் திருச்சி வாழை ஆராய்ச்சி மையத்தின் ஆதரவுடன் முதன்முறையாக இந்த ஆண்டில் ஆஸ்திரியா நாட்டிற்கு 1000 கிலோ செவ்வாழை ஏற்றுமதி செய்யப்பட்டது.

மதுரையிலிருந்து மல்லிகை மற்றும் பதப்படுத்தப்பட்ட வேளாண் பொருட்கள், தேனியிலிருந்து வாழை பழங்கள் ஏற்றுமதி செய்ய அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் மரவள்ளி கிழங்கு அதிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், (ஜவ்வரிசி) உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்புள்ளதாக அபிடா தெரிவித்துள்ளது. பல பொருட்களுக்கு அபிடாவின் முயற்சியால் பூவிசார் குறியீடு (GI) பெற (சாத்தூர் சம்பா வத்தல், இராமநாதபுரம் சித்திரக்கார் அரிசி, கோவில்பட்டி கடலைமிட்டாய்) போன்ற பொருட்களுக்கு பெற முயற்சி நடைபெற்று வருகின்றது. இதற்கு பின்னர் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் மூலிகை பயிர்களான, அவுரி, நித்திய கல்யாணி போன்ற தாவரங்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சீமை வெள்ளரி, திராட்சை, போன்ற பயிர்களுக்கும் ஏற்றுமதி வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதிக அளவாக ஏற்றுமதி செய்ய அரசு விவசாயிகளுக்கு போதுமான வசதிகள் (போக்குவரத்து, குளிர் பதன கிடங்குகள்) அமைத்து கொடுத்து, ஏற்றுமதி விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். மேலும் ஒப்பந்த சாகுபடி மூலமாக அதிக அளவில் உற்பத்தி செய்ய ஊக்குவிக்க வேண்டும், தர மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி தந்தால் ஏற்றுமதியில் முன்னேறலாம்.

தகவல் : அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை, 94435 70289.

Spread the love