September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தமிழ்நாடு கடல்சார்‌ வாரியத்தின்‌ 93வது கூட்டம்‌

அமைச்சர்‌ எ.வ.வேலு தலைமையில்‌ நடைபெற்றது

சென்னை, செப்.14

மத்திய அரசின்‌ கட்டுப்பாட்டில்‌ 3 பெரிய துறைமுகங்களும்‌, தமிழக அரசின்‌ கட்டுப்பாட்டில்‌ 6 சிறிய துறைமுகங்களும்‌, 11 தனியார்‌ அரசு கூட்டு துறைமுகங்களும்‌ செயல்பட்டு வருகின்றன.

சென்னையில்‌ இருப்பது போல்‌ மற்ற இடங்களிலும்‌, பொதுமக்களுக்கு தேவையான பொழுதுபோக்கு வசதிகள்‌ தற்போது இல்லாத நிலை உள்ளது. எனவே, பிற இடங்களிலும்‌ பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டியது அவசியமாகிறது.

கடற்கரைகளில்‌ ஓயாத அலைகளும்‌, நீலக்கடலும்‌ மக்களுக்கு கண்கொள்ளா காட்சிகளாக அமைந்திருப்பது இயற்கை நமக்கு வழங்கியுள்ள செல்வமாகும்‌.

கடற்கரைகளையும்‌, கடல்‌ அலைகளையும்‌, நீண்டு, பரந்து, விரிந்துள்ள நீலக்கடலையும்‌, கூட்டம்‌ கூட்டமாக வந்து பார்த்து மகிழும்‌ மக்களுக்கு பாதுகாப்புடன் கூடிய நீர்‌ விளையாட்டுகள்‌ உட்பட பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளையும்‌ கடற்கரை பகுதிகளில்‌ அமைத்துக் கொடுத்தால்‌ மக்கள்‌ மேலும்‌, உற்சாகம்‌ அடைவார்கள்‌ என்பது என்‌ எண்ணம்‌.

கடலுக்குள்‌ கடலின்‌ ஆழம்‌, கடல்‌ அலைகளின்‌ தன்மை ஆகியவற்றிற்கு ஏற்ப எங்கெல்லாம்‌ படகுப் போக்குவரத்து நடத்த அனுமதிக்கலாமோ, அங்கெல்லாம்‌ ஆய்வு செய்து படகு போக்குவரத்துகளை அணுமதிப்பது குறித்து பரிசீலணை செய்யலாம்‌. இதற்கு முன்‌ உதாரணமாக இராமேஸ்வரம்‌ அக்னி தீர்த்தக்கரையில்‌ 2010ம்‌ ஆண்டு படகு போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டு, நடத்தப்பட்டுள்ளது. அது பொதுமக்களின்‌ வரவேற்பை பெற்றது என்பதை அனைவரும்‌ அறிந்ததே. அதற்கு பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதுடன்‌ தேவையான கட்டுமானங்களையும்‌ மேற்கொள்ள வேண்டும்‌.

தற்போதைய அரசின்‌ நிதிநிலைமை இதற்கெல்லாம்‌ ஒத்துழைக்குமா? என்பது சந்தேகமே. வெளிநாடுகளில்‌ உள்ளது போன்று நீர்‌ விளையாட்டுகள்‌, போட்டிங்‌ போன்றவற்றை தனியார்‌ முதலீடு மூலம்‌ மேற்கொள்ளலாமா? என்பதை இந்த வாரியம்‌ ஆய்வு செய்ய வேண்டும்‌.

கடல்‌ நீரில்‌ சுற்றுப்பயணம்‌ மேற்கொள்வது அனைவரும்‌ விரும்பக்கூடியது. சிறிய கப்பல்‌ மூலம்‌ சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை ஒவ்வொரு துறைமுகத்திற்கும்‌ உல்லாசப்பயணம்‌ போய்வர அனுமதிக்க முடியுமா? என்பதையும்‌ இந்த வாரியம்‌ பரிசீலிக்க வேண்டும்‌.

சென்னையிலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு நேரடியாக செல்லும்‌ வகையில்‌ இராமேஸ்வரம்‌ போட்‌ மெயில்‌ இரயில்‌ சேவையும்‌, அதன்‌ தொடர்ச்சியாக கப்பல்‌ சேவையும்‌ நடைமுறையில்‌ இருந்தது. தற்போது, அத்தகைய இரயில்‌ சேவையை தொடங்குவது குறித்தும்‌ வாரியம்‌ ஆய்வு செய்து ஒன்றிய அரசின்‌ அனுமதி பெறலாமா?

மேலும்‌, தமிழ்நாடு கடல்சார்‌ வாரியத்தின்‌ 31.3.2021 உடன்‌ முடிவடைந்த நிதியாண்டு மற்றும்‌ எப்ரல்‌ 2021 முதல்‌ ஜூலை 2021 மாதங்களுக்கான நிதி மற்றும்‌ செயல்பாடு குறித்த அறிக்கைகள்‌ வாரியக்குழுமக்கூட்டத்தில்‌ ஆய்வு செய்யப்பட்டது.

Spread the love