September 20, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரியத்தில் விபத்து காப்பீடு ரூ.1 லட்சம் வழங்கப்படும் கடலூர் ஆட்சியர் தகவல்

கடலூர், ஆக.11

கடலூர் மாவட்டத்தில் வசிப்பிடமாகக் கொண்டு வாழும் நரிக்குறவர் சமுதாயத்தைச் சார்ந்த18 வயது முதல் 60 வயதிற்குள் உள்ளவர்கள் தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாரியத்தில் பதிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு கட்டணமின்றி அடையாள அட்டை வழங்கப்படும்.

உறுப்பினர்களது பதிவை 3 ஆண்டுகளுக்கு கட்டாயம் புதுப்பித்தல் வேண்டும். நலத்திட்ட உதவிகள் இந்நலவாரியத்தின் மூலம் 10ம் வகுப்பு முதல் முதுகலைபட்டம், தொழிற்கல்வி பயில்பவர்களுக்கு கல்வி உதவித் தொகை, தொழிற் கடன் மானிய உதவி, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவி, கண் கண்ணாடி உதவித் தொகை, விபத்தினால் மரணம் ஏற்படின் நிவாரணம், ஊனம் ஏற்படின் (ஊனத்தின் தன்மைக்கேற்ப விபத்து காப்பீடு), ஓய்வூதியம், இயற்கை மரண உதவித் தொகை மற்றும் ஈமச்சடங்கு உதவி போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பப் படிவத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலூர் – 607 001 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பலாம். இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்: ஆதார் அட்டை, புகைப்படம் 2, குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆகியவற்றை இணைத்தல் வேண்டும். மேற்கண்ட திட்டத்தின் கீழ் நரிக்குறவர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறுமாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Spread the love