May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை. பயறு வகைகளின் விதை இருப்பு நிலவரம்

கோவை, மே 6

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பயறுவகைத் துறையில் உற்பத்தி செய்யப்பட்ட பல்வேறு பயறு வகைகளின் ஆதார மற்றும் சான்று நிலை விதைகள் விற்பனைக்கு உள்ளது. எனவே, விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விதைகளை பெற்றுக் கொள்ளலாம்.

· துவரை கோ 8 ஆதார மற்றும் சான்று விதை – 1000 கிலோ
· உளுந்து வம்பன் 8 ஆதார மற்றும் சான்று விதை– 16000 கிலோ
· உளுந்து வம்பன் 11 ஆதார மற்றும் சான்று விதை – 1400 கிலோ
· உளுந்து மதுரை 1 சான்று விதை– 3000 கிலோ
· பாசிப்பயறு கோ 8 சான்று விதை– 840 கிலோ

மேலும் தகவலுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், பயறுவகைத் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், கோயமுத்தூர் – 641 003.,தொலைப்பேசிஎண் – 0422 24590498 தொடர்பு கொள்ளலாம்.

Spread the love