June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி

கோவை, ஜூன் 3

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் மூலம் நேரடியாக (Direct Mode) அங்கக வேளாண்மை பயிற்சி வரும் 7.6.22 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.30 – 1.00 மற்றும் 2.00 – 5.30 வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில்,
· இயற்கை முறையில் பயிர் சத்துக்கள் மேலாண்மை
· களை மேலாண்மை
· இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டி தயாரித்தல்
· இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு
· அங்கக சான்றிதழ் பெறும் வழிமுறைகள் மற்றும் பங்கேற்பாளா்களின் உறுதியளிப்புத் திட்டம் போன்ற தலைப்புகளில் பயிற்சி நடைபெற உள்ளது.

இப்பயிற்சியின் பயிற்சி கட்டணம் ரூ.590/-, கூடுதல் விவரங்களுக்கு கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

பேராசிரியர் மற்றும் தலைவர், நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் – 641 003. மின்னஞ்சல் : organic@tnau.ac.in, தொலைபேசி : 0422 6611206, 0422 2455055.

Spread the love