June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான பயிற்சி

கோவை, ஜூன் 21

கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் ஐந்து நாட்கள் வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்;சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியானது உழவர்கள், பெண்கள், இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள், பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்க்கு வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பற்றிய அனைத்து தகவல்களும் ஒருங்கிணைந்து வழங்கப்படுகிறது. இப்பயிற்சி வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் ஜுலை 2022, 4 முதல் 8 வரை வழங்கப்படுகிறது. பயிற்சி கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.10,000 + GST 18% ஆக மொத்தம் ரூ.11,800/- வசூலிக்கப்படுகிறது. பதிவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே (20 நபர்கள்) உள்ளது.

மேலும் பதிவுக்கு மின்னஞ்சல் : business@tnau.ac.in, eximabdtnau@gmail.com மற்றும் தொலைபேசி எண்: 0422-6611310, 95004 76626.

Spread the love