October 16, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு தமிழக ஆளுநர் பாராட்டு

கோவை, அக்.8

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணை வேந்தர், முனைவர் நீ.குமார், தமிழக ஆளுநர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேந்தரை 07.10.2021 அன்று சென்னையில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது, துணை வேந்தர், பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் பற்றிய நடவடிக்கைகளை ஆளுநரிடம் எடுத்துரைத்து பல்கலைக்கழகத்தின் மிகச்சிறந்த வேளாண்மை சார்ந்த சாதனைகள் அடங்கிய குறும்புத்தகத்தை வழங்கினார். அச்சமயம், சமீபத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தேசிய அளவில் வென்ற பசுமை மற்றும் தூய்மையான வளாக விருது, முதுகலை மாணவர்களுக்கான அகில இந்திய அளவில் நடைபெற்ற போட்டி தேர்வில் தோட்டக்கலை, வனவியல் மற்றும் வேளாண் பொறியல் துறையில் பெற்ற மூன்று விருதுகளை பற்றி ஆளுநரிடம் தெரிவித்தார். தொடர்ந்து ஆளுநர் பேசுகையில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் தரவரிசையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமானது 33வது இடத்தில் இருந்து 8வது இடத்திற்கு முன்னேறியமைக்காக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் ஆசிரியர்களை வெகுவாக பாராட்டினார். மேலும் விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் கடுமையாக உழைத்து இப்பல்கலைக்கழகத்தினை மேன்மேலும் உயர்த்தி பல சாதனைகளை புரிய வேண்டும் என்று ஆளுநர் அன்புடன் கேட்டுக்கொண்டார்.

Spread the love