June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தமிழ்நாட்டில் 2022ம் வருடத்திற்கான தென்மேற்குப் பருவமழை முன்னறிவிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை தகவல்

கோவை, மே 21

எதிர்வரக்கூடிய 2022ம் ஆண்டின் தென்மேற்குப் பருவமழைக் காலத்திற்கான (ஜுன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலுள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து பெறப்பட்ட மழை மனிதன் (Australian Rainman International V.4.3 Software) என்னும் கணிணி கட்டமைப்பைக் கொண்டு 2022ம் ஆண்டிற்கான தென்மேற்குப் பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 60 சதவிகித வாய்ப்பிற்கான எதிர்பார்க்கப்படும் மழையளவு கீழே தரப்பட்டுள்ளது.

வடகிழக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் சராசரி மழையளவு விட அதிகமாக மழை எதிர்பார்க்கப்படுகிறது. பிற மாவட்டங்களில் சராசரி மழையளவு எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் தென்மேற்கு பருவமழை முன்னறிவிப்பு – 2022

வ.எண் மாவட்டம் சராசரிமழையளவு எதிர்பார்க்கப்படும் சதவிகித வேறுபாடு
(மி.மீ) மழையளவு (மி.மீ) (%)

1 அரியலூர் 377 370 -2
2 செங்கல்பட்டு 450 490 8
3 சென்னை 440 480 8
4 கோயமுத்தூர் 210 230 9
5 கடலூர் 360 400 10
6 தர்மபுரி 392 400 2
7 திண்டுக்கல் 308 350 12
8 ஈரோடு 260 255 -2
9 கள்ளக்குறிச்சி 410 435 6
10 காஞ்சிபுரம் 479 560 14
11 கன்னியாகுமரி 491 610 20
12 கரூர் 199 220 10
13 கிருஷ்ணகிரி 375 365 -3
14 மதுரை 325 320 -2
15 மயிலாடுதுறை 295 310 5
16 நாகபட்டிணம் 279 275 -1
17 நாமக்கல் 336 350 4
18 பெரம்பலூர் 279 260 -7
19 புதுக்கோட்டை 330 360 8
20 இராமநாதபுரம் 135 150 10
21 இராணிபேட்டை 450 425 -6
22 சேலம் 421 450 6
23 சிவகங்கை 417 425 2
24 தஞ்சாவூர் 314 300 -5
25 தேனி 215 245 12
26 தென்காசி 175 200 13
27 திருவள்ளூர் 456 540 16
28 திருவாரூர் 302 295 -2
29 தூத்துக்குடி 67 75 11
30 திருச்சிராப்பள்ளி 277 295 6
31 திருநெல்வேலி 128 160 20
32 திருப்பத்தூர் 416 405 -3
33 திருப்பூர் 151 150 -1
34 திருவண்ணாமலை 449 505 11
35 நீலகிரி 875 950 8
36 வேலூர் 453 500 9
37 விழுப்புரம் 405 440 8

38 விருதுநகர் 190 190 0

Spread the love