June 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜூன் 9

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் 13ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மத்திய கிழக்கு அரபிக்கடல், கர்நாடக கரையோரப் பகுதியில் பலத்த சூறாவளி வீசக்கூடும். ஜூன் 11 முதல் 13ம் தேதி வரை மத்திய கிழக்கு அரபிக்கடல், வடகேரளா, கர்நாடக கடலோரம், லட்சத்தீவில் பலத்த சூறாவளி ஏற்படக்கூடும். மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் இன்று முதல் 4 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Spread the love