June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தரமான இடுபொருட்களை உபயோ கித்தால் அதிக மகசூல் பெறலாம்

விதைப்பரிசோதனை அலுவலர் தகவல்

திருநெல்வேலி, ஜூன் 22

விவசாயத்தில் அதிக மகசூல் பெற்று லாபம் பெற தரமான இடுபொருட்களை உபயோகித்தல் அவசியமாகும். இடுபொருட்களில் முக்கியமானதும் முதன்மையானதும் தரமான விதையாகும்.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது பழமொழி. தரமான விதைகளைப் பயன்படுத்தினால் மட்டுமே விதைகள் சீராக முளைத்து தேவையான பயிர் எண்ணிக்கை, சீரான பயிர் வளர்ச்சி, கலப்பிடமில்லாத பயிர் மற்றும் ஒரே நேரத்தில் அறுவடைக்கு வந்து அதிக மகசூல் கிடைப்பதுடன் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும். தரமான விதை என்பது நல்ல முளைப்புத்திறன், சுத்தத்தன்மை, பிறரகக்கலவன் இன்றி இருத்தல் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட ஈரப்பதம் இருக்கும் விதையாகும். விதையின் புறத்தூய்மை என்பது பயிர் விதையைத் தவிர பிறபயிர் விதைகள், களை விதைகள் மற்றும் இதர தேவையற்ற பொருட்களின் கலப்பு இல்லாமல் இருத்தல் வேண்டும்.

நல்ல முளைப்புத்திறன் உள்ள விதைகளே சீராக வளர்ந்து சிறப்பான மகசூல் தரும். நிர்ணயிக்கப்பட்ட முளைப்புத்திறன் நெல்லுக்கு 80%, மக்காச்சோளம் 90%, சோளம், கம்பு மற்றும் சிறுதானிய பயிர்களுக்கும், பயறு வகைகளுக்கு 75%, வெண்டைக்கு 65%, கத்தரி, தக்காளி, நிலைக்கடலை 70%, மிளகாய் 60% மற்றும் எள் 80% இருந்தால் மட்டுமே போதிய பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்பட்டு அதிக மகசூல் பெற விவசாயிகள் தாங்கள் உபயோகிக்கும் விதைகளை பாளையங்கோட்டை அருகிலுள்ள நிருபர் காலனியில் அமைந்துள்ள திருநெல்வேலி விதைப்பரிசோதனை நிலையத்தில். விதைகளை பரிசோதனை செய்து பயன்பெற திருநெல்வேலி விதைப்பரிசோதனை அலுவலர் ஞா.ஆனந்தி ராதிகா தெரிவித்தார்.

Spread the love