August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தரமான நிலக்கடலை விதை உற்பத்தி பயிற்சி

கோவை, ஜூலை 13

கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை வட்டாரம், இரும்பொறை வருவாய் கிராமம் பெத்திபேட்டையில் விதைப்பெருக்கத் திட்டத்தின் கீழ் நிலக்கடலை விதைப்பண்ணை ஆய்வு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு விதைப்பண்ணை பயிர் செய்யும் விபரங்களான நிலத்தேர்வு முதல் பயிர் விலகுதூரம், கலவன் கண்டறிதல், கலவன் அகற்றுதல், வயல் ஆய்வு செய்தல், விதை சுத்திப்பணி, விதை ஆய்வு மற்றும் விதைசான்றட்டை கட்டுதல் வரை எடுத்துரைக்கப்பட்டது.

இந்த ஆய்வு கூட்டத்தில் கிருஷ்ணவேணி, வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) சை.நர்கீஸ், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், பாக்யலட்சுமி, வேளாண்மை உதவி இயக்குநர், காரமடை, சிலம்பரசன், விதைச்சான்று அலுவலர், வினோத்குமார், உதவி அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Spread the love