January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தரமான விதைகளை மட்டுமே பயன்படுத்த வேளாண்மை அலுவலர் ஆலோசனை

கிருஷ்ணகிரி, ஏப்.23

தரமான விதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென, விவசாயிகளுக்கு கிருஷ்ணகிரி விதை பரிசோதனை நிலைய அலுவலர் லோகநாயகி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள், தற்போது பெய்துள்ள பருவமழைக்கு விவசாயம் மேற்கொள்ள தரமான

நல்ல விதைகளைத் தேர்வு செய்து நடவிற்கு பயன்படுத்த வேண்டும். விதைப்பிற்கு தேவையான விதைகள் விவசாயியிடம் இருந்து சொந்த விதைகளை விதைப்பதற்கு பயன்படுத்தும் பட்சத்தில்,

விதைகளின் முளைப்புத்திறன் அறிந்து விதைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விதை விற்பனையாளர்களிடம் இருந்து பெறப்படும் விதைகளின் தரமறிந்து விவசாயிகள் பெற்றுச்

செல்ல வேண்டும். மேலும் விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகள் தங்களிடம் உள்ள விதைகளின் முளைப்புத்திறன் பற்றி அறிய, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த

வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் விதை பரிசோதனை நிலையத்தில் கட்டணமாக, ரூ.30 செலுத்தி விதை முளைப்புத் திறன் சதவீதம் அறிந்து நல்ல மகசூல்

பெற வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

Spread the love