June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தரமான விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி

மதுரை, ஜூன் 15

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் 15.6.22 அன்று கோவிலாங்குளம் கிராமத்தில் தரமான விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி மற்றும் பருவத்திற்கேற்ற நெல் பயிர் ரகங்கள் தேர்வு செய்து அதிக மகசூல் பெறுவது குறித்து விளக்கப்பட்டது. மேலும் அங்ககச்சான்று பெறுவதற்கான நடைமுறைகள், பதிவு கட்டணம் பராமரிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும் வயலாய்வு செய்யும் முறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இப்பயிற்சியில் சி.சிங்காரலீனா, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், மதுரை தலைமையேற்றார். மேலும் வெ.செல்வராஜ், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், செல்லம்பட்டி, முனைவர் ச.வள்ளல்கண்ணன், வேளாண் அறிவியல் நிலையம், மதுரை, முனைவர் க.கண்ணன், விதைச்சான்று அலுவலர் (தொ.நு), சௌகத்நூரியா, விதைச்சான்று அலுவலர், செல்லம்பட்டி ஆகியோர் தரமான விதை உற்பத்தி மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் விற்பனை வாய்ப்புகள் குறித்து எடுத்துக் கூறினர். ராமர், உதவி விதை அலுவலர் மற்றும் லு.ராபின், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர். மதுரை மாவட்ட தென்னை மற்றும் இதர பயிர் உழவர் உற்பத்தியாளர் குழுவிலிருந்து 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Spread the love