October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தரிசு நில மேம்பாடு திட்டத்திற்கு மானியம்

விருதுநகர், அக்.11

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டாரத்தில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தரிசு நில மேம்பாடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் தரிசாக இருக்கும் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரலாம். இதில் தரிசு நிலங்களில் உள்ள புதர்களை அகற்றவும், நிலத்தை சமன்படுத்தவும், உழவு செய்யவும், சாகுபடி செய்யவும் ஒரு ஹெக்டேருக்கு ரூ.13,000/- மேலாக மானியம் வழங்கப்படுகிறது. இராஐபாளையம் வட்டாரத்தில் குறிச்சியார்பட்டி, ஜமீன் நத்தம்பட்டி, கிழவிகுளம், தெற்கு வெங்காநல்லூர், வடக்கு தேவதானம், தெற்கு தேவதானம் மற்றும் ஜமீன் நல்லமங்களம் கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இக்கிராமங்களில் தரிசாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் உடனடியாக அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டு தரிசு நிலங்களை சரி செய்து சாகுபடிக்கு கொண்டு வர இராஐபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் தி.சுப்பையா கேட்டுக்கொண்டார்.

Spread the love