June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தலைவாசலில் வேளாண் கண்காட்சி

ஜூலை 1 முதல் 3 வரை நடக்கிறது

சேலம், மே 24

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தலைவாசலில் 4வது ஆண்டாக வேளாண் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சி ஜூலை 1 முதல் 3 வரை நடைபெறுகிறது.

ஒருங்கிணைந்த விவசாயிகள் நலக் கூட்டமைப்பு சார்பில் இந்தக் கண்காட்சி நடத்தப்படவுள்ளது.

விதைகள், பால் பண்ணை, பண்ணை உபகரணங்கள், பால் பண்ணை, பண்ணைசார் தொழில்நுட்பங்கள், புதிய வேளாண் தொழில்நுட்பங்கள், அறுவடை எந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

இந்தக் கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 50,000க்கும் மேற்பட்டோர் இந்தக் கண்காட்சியைப் பார்வையிடுவார்கள் என எதிர்பார்ப்பதாக கண்காட்சி அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தக் கண்காட்சி தொடர்பான விவரங்களைப் பெற 95667 12939, 99442 92020 என்ற எண்களில் பெறலாம்.

Spread the love