June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தானிய பயிர்களில் அறுவடை பின்செய் நேர்த்தி மற்றும் மதிப்புக்கூட்டுதல் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி

மதுரை, ஜூன் 16

மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டார வேளாண்மை மற்றும் உழவர்நலத் துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தானிய பயிர்களில் அறுவடை பின்செய் நேர்த்தி மற்றும் மதிப்புக்கூட்டுதல் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியினை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிருணைப்பாளர் ராமசுப்பிரமணியன் தலைமையேற்று தொடங்கி வைத்து விவசாயிகளிடம் தானிய பயிர்கள் சாகுபடிகள் குறித்து விளக்கினார். மனையியல் உதவி பேராசிரியர் ஆரோக்கியமேரி, தானிய பயிர்களில் அறுவடைக்கு பின் செய்ய வேண்டிய நேர்த்தி முறைகள் பற்றியும், அதனை மதிப்புக்கூட்டும் பொருளாக மாற்றக்கூடிய தொழில்நுட்பங்கள் குறித்தும் அதனை சந்தைப்படுத்துதல் குறித்தும் விளக்கமளித்தார். தானிய பயிர்களில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விவசாயிகளின் பார்வைக்கு கருத்துக்காட்சி மூலம் வைக்கப்பட்டது. இப்பயிற்சியானது 40 விவசாயிகளை கொண்டு நடைபெற்றது. இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட பணியாளர்களான மூவேந்திரன் மற்றும் யுவராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Spread the love