திருப்பூர், மே 8
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அடித்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இடி, மின்னல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை இரவு 7 மணி வரை நீடித்தது. சூறைக்காற்றால் அலங்கியம் சாலை பகுதியில் மின் கம்பிகள் உரசியதில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைபட்டது.
இதனால் தாராபுரத்தை சுற்றியுள்ள கோவிந்தாபுரம், அலங்கியம், தளவாய்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலை காணப்பட்டு வந்த நிலையில் மாலையில் மழை பெய்ததால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழை காரணமாக இரவில் குளிர்ந்த காற்று வீசியது.
Spread the love