திருப்பூர், ஜூலை 27
திருப்பூர் மாவட்டம். தாராபுரம் தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை, தாராபுரம் வட்டாரம், தோட்டக்கலை உதவி இயக்குனர் (பொ) செ. மிதுலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
தமிழக முதல்வர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 2022-23- கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களாள தளவாய்பட்டினம், ஊத்துப்பாளையம், அலங்கியம், நாதம்பாளையம், வீராட்சிமங்கலம், கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன் பெறலாம்.
மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1. துல்லிய பண்ணையம் அமைக்க ஏக்கருக்கு 6,000 ரூபாய் வீதம் 5 ஏக்கர் இலக்கும், 2. உழவர் சந்தை அட்டை கொண்டு காய்கறி பயிர்களை சாகுபடி செய்து விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 8000 ரூபாய் வீதம் 8 ஏக்கர் இலக்கும், 3. தென்னையில் ஊடுபயிராக வாழை சாகுபடிக்கு ஏக்கருக்கு 10,500 ரூபாய் வீதம் 5 ஏக்கர் இலக்கும், 4. அலுமினிய ஏணி ஒன்றுக்கு பத்தாயிரம் வீதம் ஒரு எண் இலக்கும், 5. பவர் ஸ்பிரேயர் (8-12 லிட்டர்) ஒன்றுக்கு 3,100 ரூபாய் வீதம் ஒரு எண் இலக்கும் பெறப்பட்டு மானியம் வழங்கப்படுகிறது.
தேசிய தோட்டக்கலை இயக்கம் 2022-23 திட்டத்தின் கீழ் 1. வீரிய ஒட்டு இரக காய்கறி குழித்தட்டு நாற்றுகள் – தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற நாற்றுக்கள் மானியத்தில் மடத்துக்குளம் சங்கராமநல்லூரில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். மேற்கண்ட இனத்தின் கீழ் 50.5 ஹெக்டர் இலக்கும், 2. வெங்காய விதைகள் 45 ஹெக்டர் இலக்கும், 3. பப்பாளி செடிகள் 6 ஹெக்டர் இலக்கும், 4. குறைந்த விலை வெங்காய சேமிப்பு பட்டறை ஒன்றுக்கு (25 மெட்ரிக் டன்) 87,500 ரூபாய் மானியத்தில் 25 எண்கள் இலக்கும், மேலும் ஆதி திராவிட விவசாயிகளுக்கு 1.சிப்பம் கட்டும் அறை (30×20சதுர அடி) ஒன்றுக்கு 2 இலட்சம் வீதம் ஒன்று இலக்கும், 2. குறைந்த விலை வெங்காய சேமிப்பு பட்டறை 3 எண்கள் இலக்கும், 3. தோட்டக்கலை பயிர்களின் மகரந்த சேர்க்கையை அதிகரிக்க தேனீ பெட்டிகள் 10 எண்களுக்கு 24,000 மானியம் ஒரு விவசாயிக்கு 10 எண்கள் வீதம் 50 எண்கள் இலக்கும், 4. காய்கறி பயிர்களுக்கு நிலப் போர்வை ஒரு ஹெக்டேருக்கு 16,000 வீதம் 3 ஹெக்டர் இலக்கும், 5. பவர் ஸ்பிரேயர் (8- 12) லிட்டர் ஒன்றுக்கு 2,500 வீதம் ஒன்று இலக்கும், 6. பவர் ஸ்பிரேயர் (12-18 லிட்டர்) ஒன்றுக்கு 3,000 வீதம் ஒன்று இலக்கும் பெறப்பட்டு மானியம் வழங்கப்படுகிறது.
மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்த கிராம உதவி தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொள்ளவும்.