May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தாவரங்களை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் முறைப்பற்றி வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்

விருதுநகர், மார்ச் 16

நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் மு.சாருபிரபா, மு.காயத்ரி, ஸ்ரீ ஹரிணி, ரா. ஐஸ்வர்யா, மு.ஷாஸ்மா பானு மற்றும் க.ஜாஸ்வாரியா ஆகியோர் கிராம வேளாண் கள பயிற்சியின் போது தாவரங்களை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் முறைப் பற்றி விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் அளித்தனர்.

சூடோமோனஸ் புளோரோசன்ஸ் :

சூடோமோனஸ் புளோரோசன்ஸ் என்பது பயிர்களில்இலைகருகல், இலைப்புள்ளி, குலைநோய், துருநோய், வாடல் நோய் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும் உயிர் பூஞ்சனக்கொல்லி ஆகும். இது பயிர்களில் நோயை உண்டுப்படுத்துற பூஞ்சானங்களை கட்டுப்படுத்தி நோய் வராமல் பாதுகாக்கின்றது. இதனை எல்லா பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். பயிர்களுக்கு தேவையான வளர்ச்சி ஊக்கிகளை (ஹார்மோன்கள்) உற்பத்தி செய்கிறது. பயிர்களின் வேர்களை தாக்கும் நூற்புழுக்களை (நேமட்டோடு) கட்டுப்படுத்துகிறது.

அசோஸ்பைரில்லம் :
அசோஸ்பைரில்லம் என்பது ஒரு வகையான பாக்டீரியா. இது வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜன் வாயுவை தழைச்சத்தாக மண்ணில் நிலைநிறுத்தி பயிர்களுக்கு அளிக்கிறது. பயிர் வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்து வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. பயிரின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது.

ட்ரைக்கோடெர்மா விரிடி :

ட்ரைக்கோடெர்மா விரிடி என்பது பயிர்களில் மண், நீர், விதையின் மூலம் பரவும் அழுகல் மற்றும் வாடல் நோய்களை கட்டுப்படுத்தும் இயற்கை பூஞ்சனக்கொல்லி ஆகும். 1 கிலோ விதைக்கு 10 கிலோ ட்ரைக்கோடெர்மா விரிடியை பயன்படுத்தலாம்.

Spread the love