June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

திடமான உடல் நிலைக்கு தினை

“சிறு தானியங்களின் இளவரசி” என்று அழைக்கப்படும் தினை உற்பத்தியில் உலகளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தினை சாகுபடி செய்யப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. சங்க கால இலக்கியங்களில் தேன், தினை மாவு பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது.

தினையை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் பலன்:

  1. தினை குறைவான “கிளைசிமிக் இன்டெக்ஸ்(50.8)” உடைய உணவாதலால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க மிகச்சிறந்த உணவாகும்.
  2. தினையில் அதிகளவில் “டிரிப்டோபேன்” இருப்பதால், உடலில் அதிகளவில் கொழுப்பு சேர்வதைக் குறைத்து உடல் குண்டாவதைத் தடுக்கிறது.
  3. கால்சியம் மற்றும் இரும்புத் தாதுக்கள் அதிகளவில் திணையில் காணப்படுவதால் எலும்பு மற்றும் தசைகளுக்கு வலுவளிக்கிறது.
  4. தினையில் அதிகளவில் விட்டமின் டீ1 இருப்பதால் நரம்பு சம்பந்தமான நோய்கள் வருவதைத் தடுக்கிறது.
  5. தினையானது பசையம் (குளுட்டன்) அல்லாதது மற்றும் புரதச் சத்து அதிகளவில் இருப்பதால் “அசிட்டைல்கொலைன்” அதிகளவில் உற்பத்தியாவதற்கு துணை செய்கிறது. தினையை தினசரி உணவில் சேர்த்தால் இதயத்தை பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.
  6. தினையில் அனைத்து சத்துக்களும் மிகுந்து காணப்படுவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கும்.

இயற்கை முறை சாகுபடி தொழில் நுட்பம்:
தினை மூன்று மாத பயிராகும். தினை விதைப்பு செய்ய கார்த்திகை, தை மற்றும் சித்திரைப் பட்டங்கள் சிறந்தவை. ஆடிப் பட்டத்தில் விதைத்தால் அறுவடையின்போது மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. கோவை வேளாண் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள ஊழு -6 இ ஊழு -7 இரகங்கள் நல்ல மகசூ+ல் தரக்கூடிய இரகங்களாகும். தினை விதைப்பு செய்ய வடிகால் வசதியுடைய மணல்பாங்கான மண்வகை சிறந்தது. நிலம் உழும்பொழுது முதலில் இரண்டு சால் சட்டிக் கலப்பையிலும் அடுத்து இரண்டு சால் சட்டிக்கலப்பையிலும் குறுக்கு நெடுக்காக உழ வேண்டும். அடீயுரமாக ஏக்கருக்கு 5 டன் தொழுவுரம் இடவேண்டும். விதைப்பதற்கு ஏக்கருக்கு 4கிலோ விதை தேவைப்படும். 4 கிலோ விதையினை 10 கிலோ மணலுடன் கலந்து விதைக்க வேண்டும். விதைத்த பின் கொக்கி கலப்பை கொண்டு ஒரு உழவு செய்ய வேண்டும்.

மண்ணில் இருக்கும் ஈரப்பதத்திலேயே 7 ஆம் நாளில் பயிர் முளைத்துவிடும். மழை இல்லாத நேரங்களில் மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து 15 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் கட்டினால் போதுமானது. விதைத்த இருபதாம் நாளில் களை எடுக்க வேண்டும். அதன்பின் பயிர் வளர்ந்து நிலத்தை மூடி விடுவதால் களைகள் வளராது. களை எடுத்தபின் 20, 40 மற்றும் 60 ஆம் நாட்களில் 6 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை 60 லிட்டர் தண்ணீரில் கலந்து வயல்முழுவதும் தெளிக்க வேண்டும். அதற்குமேல் உரமிடத் தேவையில்லை. தினை சாகுபடியில் பூச்சி நோய் அதிகளவில் தாக்காது. விதைத்த எழுபதாம் நாளில் பதிர் பிடித்து 90 ஆம் நாளில் கதிர் முற்றி அறுவடைக்குத் தயாராகிவிடும். ஏக்கருக்கு சராசரியாக 1000 முதல் 1500 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

தகவல் : ம.மகாலெட்சுமி, விதைப் பரிசோதனை அலுவலர், அ.லயோலா அன்புக்கரசி, ம.சரஸ்வதி, வேளாண்மை அலுவலர்கள், விதைப் பரிசோதனை நிலையம், சிவகங்கை.

Spread the love