May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்தாலும் குணமடைபவர்கள் எண்ணிக்கையும் உயர்கிறது: அமைச்சர்

புது தில்லி, ஏப்.30

இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்து வந்தாலும், கோவிட் தொற்றில் இருந்து குணமடைபவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்­வர்தன், புது தில்லியில் உள்ள லேடி ஹார்டிங்கே மருத்துவ கல்லூரிக்கு நேரில் சென்று அங்குள்ள வசதிகளை ஆய்வு செய்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்து வந்தாலும், தொற்றில் இருந்து குணமடைபவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

கோவிட் பலி விகிதம் குறைவாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பலி விகிதம் 1.11 சதமாக குறைந்துள்ளது. கோவிட்டுக்கு எதிரான சிறந்த ஆயுதம், கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிப்பதுதான். முக கவசம் அணிதல், அடிக்கடி சோப்பால் கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை விட மிகப்பெரிய ஆயுதம் இல்லை. இதைத்தான் பிரதமர் மோடி, ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம், கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை விட குறைவாக இருந்தது. அதேபோல், இப்போதும் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கையை குறைத்து விடுவோம்.

கோவிட் அறிகுறி இருப்பவர்கள் பீதி அடைய வேண்டாம். நீங்களாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள். நாள் ஒன்றுக்கு 17 லட்சத்துக்கு மேற்பட்ட பரிசோதனை செய்யும் அளவுக்கு இந்தியாவின் திறன் மேம்பட்டுள்ளது. கோவிட்டுக்கு எதிரான போர் நடந்து வருகிறது. கொரோனாவை ஒடுக்க தனது அனைத்து அனுபவங்களையும் மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Spread the love