May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

தினசரி நான்காயிரம் மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் எஃகு ஆலைகள் தொடர்ந்து விநியோகம்

புது தில்லி, மே 19

நாடு முழுவதும் உள்ள பொது மற்றும் தனியார் துறையை சேர்ந்த எஃகு ஆலைகள் உயிர்காக்கும் திரவ மருத்துவ ஆக்சிஜனை தொடர்ந்து விநியோகித்து வருகின்றன. எஃகு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதானின் வழிகாட்டுதலின் படி, கோவிட் பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை அவை எடுத்துள்ளன.

பெட்ரோலியத் துறையுடன் இணைந்து, ஒரு நாளைக்கு சுமார் 10 ஆயிரம் மெட்ரிக் டன் என்ற அளவில், நாட்டின் திரவ மருத்துவ ஆக்சிஜன் தேவையில் பெரும்பங்கை அவை பூர்த்தி செய்து வருகின்றன. கடந்த மே 16 அன்று 4314 மெட்ரிக் டன் உற்பத்தி செய்திருந்த நிலையில் மே 17 அன்று இந்த அளவு 4435 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் ஆக உயர்ந்தது. செயிலில் இருந்து 1485 மெட்ரிக் டன், ஆர் ஐ என் எல்லில் இருந்து 158 மெட்ரிக் டன், டாடாவில் இருந்து 1154 மெட்ரிக் டன், ஏ எம் என் எஸ்ஸில் இருந்து 238 மெட்ரிக் டன், ஜே எஸ் டபிள்யுவில் இருந்து 1162 மெட்ரிக் டன் இதில் அடங்கும். திரவ மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எஃகு ஆலைகள் தொடர்ந்து எடுத்து வருகின்றன.

பெட்ரோலியம் துறையைப் பொருத்தவரை, தினசரி 1150 திரவ மருத்துவ ஆக்சிஜனை ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலை, இந்தியன் ஆயில் கார்ப்பரே­ன் நிறுவனத்தின் பானிப்பட் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் கொச்சி மற்றும் பினாவில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகள் வழங்கி வருகின்றன.

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பினா சுத்திகரிப்பு ஆலை, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பானிபட் சுத்திகரிப்பு ஆலை, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பொது சுத்திகரிப்பு ஆலை, எச் எம் ஈ எல் பதிந்தா சுத்திகரிப்பு ஆலை மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்தின் சென்னை சுத்திகரிப்பு ஆலை ஆகியவற்றில் உருவாக்கப்பட்டு வரும் இத்தகைய வசதிகளின் மூலம் திரவ மருத்துவ ஆக்சிஜன் நீண்ட தூரம் எடுத்துச் செல்வது தவிர்க்கப்படும். கொச்சி மற்றும் பானிபட் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் ஹிஸார் எஃகு ஆலையில் கொவிட் பராமரிப்பு மையங்கள் சமீபத்தில் பயன்பாட்டுக்குவந்துள்ளன.

Spread the love